தமிழக அரசுக்கு நன்றி! கமல்ஹாசன்.
டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு நிதி வழங்க வேண்டுமென சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து தமிழக அரசு மிகப் பெரிய தொகையை வழங்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று டொரன்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு ரூபாய் ஒரு கோடி நிதி வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து கமல்ஹாசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்த ட்விட்டரில் கூறியிருப்பதாவது
டோரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கக் கோரிய எனது அறிக்கைக்கு உடனே செவி சாய்த்து 1 கோடி ரூபாய் நிதிநல்கை அறிவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என கமல்ஹாசன் தெரிவித்தார்,
s.முஹம்மது ரவூப்
தமிழ் மலர் மின்னிதழ்
தலைமை செய்தி ஆசிரியர்,