ஓமனில் கொரோனா தொற்று
மஸ்கட்,
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமனில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 868 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது.
இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 569 பேர் கடந்த 3 நாட்களில் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 நாட்களில், 3 பேர் பலியானார்கள். இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,552 ஆக உள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 56 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி ரசூல்