அமெரிக்கா மத்திய விமான போக்குவரத்து துறை விசாரணை.

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றி எரிந்ததால் அதன் பாகங்கள் நகரம் முழுவதும் கீழே விழுந்து சிதறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Denvar விமான நிலையத்திலிருந்து 231 பயணிகள் மற்றும் 10 விமான குழு உறுப்பினர்களுடன் Honalulu என்ற பகுதிக்கு United 328 என்ற விமானம் புறப்பட்டது. அப்போது நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் எதிர்பாராதவகையில் திடீரென தீ பற்றி எரிந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் வலதுபுற Engine தீப்பற்றியதால் அதிலிருந்து சிதறிய பாகங்கள் Broomfield என்ற பகுதியில் உள்ள குடியிருப்புகளின் மேற்புறத்தில் விழுந்தது.

அதனால் United 328 என்ற விமானம் அவசரம் அவசரமாக Denvar விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் United 328 விமானத்தில் பயணம் செய்தவர்கள் Honalulu-விற்கு பயணம் செய்வதற்காக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை கண்டறிவதற்காக அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் விமான பாகங்கள் குடியிருப்புகள் மீது விழுந்த புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் நடுவானில் விமானத்தின் Engine தீப்பற்றி எரிந்ததை அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

s.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர்
மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.