நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 30

அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவைகளில் வல்லமை மிக்க கீரை என்பதாலேயே இது வல்லாரை கீரை என்றழைக்கப்படுகிறது

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

இதனைஉண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.ப

புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

இந்த கீரையை கழுவி பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது. பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். நன்கு சுவையாக இருக்கும்.

ஞாபகசக்தியை அதிகரிக்க செய்யும் வல்லாரை கீரையை வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை உணவில் சேர்க்க வேண்டும். இதனால் அவர்களது முளை செல்களின் வளர்ச்சி தூண்டப்படும். மூளைகளின் நரம்பு மண்டலத்தில் கிளைகள் போல் இருக்கும் பகுதிதான் செல்களில் இருந்து மூளைக்கு அனுப்பும் தகவல்களை உள்வாங்கும். இந்த பணி தடங்கலில்லாமல் வேகமாக மூளைக்கு அடைய வல்லாரை உதவுகிறது. மேலும் மூளைக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் செல்லவும், செல்கல் பாதிப்படைவதையும் தடுக்கிறது. இதனால் செய்யும் வேலையிலும் படிக்கும் போதிலும் பிள்ளைகள் கவனமுடன் ஒருமுகமாக செயல்பட முடிகிறது.

மூளையானது தகவலை உள்வாங்கி அவற்றை பதிய செய்து தேவையான போது நினைவுகூர்தல் பணியை செய்ய வேண்டும். இவை எல்லாமே சீராக நடைபெறும் வரை பிரச்சனையில்லை. இதில் குறைபாடு நேரும் போதுதான் மூளை மந்தமாகிறது. வல்லாரை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

வயதான பிறகு உண்டாகும் ஞாபக மறதி நோயான அல்சைமர் வருவதை தடுக்க கூடிய அளவு சக்தி கொண்டது. இன்று மன அழுத்தம் என்னும் நோய்க்கு அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். டிமென்ஷியா மற்றும் மனச்சிதைவுக்கு உட்பட்டவர்கள் ஒரு மண்டலம் அளவுக்கு வல்லாரை கீரையை ஏதேனும் ஒரு வகையில் எடுத்துவந்தால் மன அழுத்த நோய் குணமடையும்.

யானைக்கால் வியாதி இருப்பவர்கள் வல்லாரை இலையை அரைத்து நோய் தாக்கிய பகுதியில் பற்று போட்டு இறுக்கி கட்டி வந்தால் தாக்கம் குறையும். இதே போன்று விரைவீக்கத்தால் அவதிபடுபவர்கள் வலி உபாதையையும் அவை தீவிரமாகாமலும் இருக்க வல்லரை இலையை அரைத்து பற்று போடலாம்.

வல்லாறை சாறை புன், கட்டி இருக்கும் இடங்களிலும் பூசி வரலாம். வல்லாரையில் இருக்கும் ஏஸியாடிக் கோசைடு என்னும் வேதிபொருளானது புண்களை விரைவில் குணபடுத்த உதவுகிறது.

ஆய்வுகளிலும் வல்லாரை வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. செரிமான அமிலத்தை சீராக சுரக்கவும் கட்டுக்குள் வைக்கவும் இவை உதவுகிறது. வல்லாரையை சாறாக்கி தினமும் குடித்துவருவதன் மூலம் வயிற்றில் புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்னும் நுண்ணுயிரி முற்றிலும் அழிக்கப்படுகிறது. இதனால் வயிற்றுபுண் தீவிரமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, சீதக்கழிச்சல், வயிறு வலி, வயிற்று கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வல்லாரை பொடியுடன் நாட்டுசர்க்கரை கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் வயிறு வலி, பின் இடுப்பு வலி, முதுகுவலி போன்ற உபாதையை சந்திப்பார்கள் இவர்கள் மாதவிடாய் காலத்தில் வல்லாரை சாறுடன் வெந்தயத்தை குழைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் மாதவிடாய் நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இதை சாப்பிட்டால் எதிர்கொள்ளும் மாதவிடாய் நாட்களில் வலி உபாதை குறையும். இந்த நேரத்தில் பலரும் மாத்திரைகளை நாடுவதுண்டு. ஆனால் பக்கவிளைவில்லாத இயற்கை தந்த வல்லாரையை கொண்டே தீர்வு காணலாம். ஆய்வுகளிலும் வல்லாரை வலி நிவாரணி மாத்திரைகளை போன்று வலியை குறைப்பதை கண்டறிந்திருக் கின்றன.

ரத்த சோகைக்கு உள்ளானவர்களுக்கு உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.ரத்தகுழாய்களை நெகிழ்வடைய செய்கிறது. காய்ச்சலுக்கு பிறகு பலவீனமான உடலை தேற்ற உதவுகிறது. அதுமட்டும் அல்லாமல் உடல் உஷ்ணத்தால் கண்சூடு, சிறுநீர் கடுப்பு, கண் எரிச்சல், வயிறு வலி, வாய்ப்புண் பிரச்சனை இருப்பவர்கள் வல்லாரை சாற்றை அருந்திவந்தால் உடல் சூடு தணிந்து குளுமைஆகும். சரும வியாதி இருப்பவர்கள் இக்கீரையை பற்று போடுவதோடுவாரத்துக்கு இரண்டு முறை உள்ளுக்கு எடுத்துகொண்டால் சரும பிரச்சனைகள் நீங்கும். கூந்தல் வளர்ச்சிக்கும் வல்லாரை உதவுகிறது.

வல்லாரையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது வல்லாரை கீரையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடித்து தினமும் காலை தேனுடன் கலந்து குடிக்கலாம். சிறு குழந்தைகளுக்கு பாலிலும் கலந்து கொடுக்கலாம். காய்ச்சலின் போது வல்லாரைமிளகு சேர்த்து தயாரித்த உருண்டைகளை கொடுக்கலாம். இது குறித்து தனியாக பார்க்கலாம்.

குறிப்பாக…

வல்லாரை உடலுக்கு அளவுக்கு அதிகமான நன்மைகளை தருகிறது என்பதால் அளவுக்கதிகமாக எடுக்க கூடாது. பொடியாக இருந்தால் வயதை பொறுத்து 5 மிகிராம் முதல் 10 மி.கிராம் வரையிலும், சாறாக இருந்தால் 10 மிலி அளவிலும் எடுத்துகொள்வது பாதுகாப்பானது. அதிகம் எடுத்தால் குமட்டல், ஒவ்வாமை, வாந்தி பிரச்சனைகள் உண்டாகும்.

இதுபோன்ற கீரைகளின் மருத்துவ குணத்தில் அருமை பெருமைகளைத் தெரிந்து அதை முறைப்படி நமது உணவில் சேர்த்து உண்டு வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் எனவே நோய் வரும்முன் காக்க இது போன்ற கீரைகளை நாம் எடுத்துக்கொள்வோம்….

நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119

Leave a Reply

Your email address will not be published.