சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.

டெலிவரி செய்யப்படும் சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள் அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது.

இவ்வாறு டெலிவரி செய்யப்படும் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லோகரங்கன் என்பவர் தொடர்ந்த வழக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்றும் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.