இந்தி மென்பொருள் தொழில்நுட்ப நிர்வாகி ஜோதி என்ற பெயரில் இன்ஸ்டாகிராம்-ல் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இத்தாலியில் பணியாற்றும் இடத்தில் காணப்படும் வேலை கலாச்சாரம் இந்தியாவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வேலை நேர ஒழுங்கு மற்றும் பணியாளர் அணுகுமுறை குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு குறுகிய நேரத்தில் வைரலாகி, பலரும் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.
