அன்னதான அறக்கட்டளை திறப்பு விழா!
கோவை செப்டம்பர் 5
கோவை அன்னதான அறக்கட்டளை திறப்பு விழா! இன்று செப்டம்பர் 5ஆம் தேதி காலை 9 மணிக்கு புதிய சித்தாபுத்தூரில் திறக்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் நாகராஜ் முன்னுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை அன்னதான அறக்கட்டளை சார்பாக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பலரும் கலந்து கொண்டனர்.
வெள்ளிங்கிரி (தலைமை அறங்காவலர்).
நாகராஜன் (தலைவர்). ஜனார்த்தனன் (செயலாளர்) கந்தன் (உப தலைவர்)
உதயகுமார் செந்தில் குமார் மற்றும் ராஜேஷ் (இணைச் செயலாளர்கள்) லட்சுமணன் (பழங்குடியினர் சமூக ஆர்வலர்) மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிறப்பு சிற்றுண்டி வழங்கப்பட்டது
பல்லடம் வனம் பவுண்டேஷன் தலைவர் சின்னச்சாமி மற்றும் டி எம் எஸ் பழனிச்சாமி பிரபல பின்னணி பாடகர் சி என் சௌந்தரராஜன் திரைப்பட இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ், ஜீவ சாந்தி பவுண்டேஷன் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்

















