அம்பிகா தியேட்டர்
மதுரையில் கடந்த சில ஆண்டுகளாகவே மல்டி பிளக்ஸ் கலாச்சாரம் அதிகரித்தது. அதேபோல் சென்னைக்கு நிகரான வசதிகளை கொண்ட திரையரங்குகள் உருவாகியது. கோபுரம் சினிமாஸ், வெற்றி சினிமாஸ் மாட்டுத்தாவணி, வெற்றி சினிமாஸ் வில்லாபுரம், ரேடியன்ஸ் சினிமாஸ், ஐநாக்ஸ் என்று சிறந்த தரத்துடன் திரையரங்குகளில் உருவாகி வந்தது. தற்போது அம்பிகா திரையரங்கில் விடா முயற்சி ரிலீஸ் செய்யப்பட்டு அதில் பெரும் ரசிகர்கள் கூட்டமும் இல்லை. எனவே பல்வேறு திரையரங்குகள் மதுரையில் பெருகி விட்ட நிலையில் லாபம் பெரிதாக எதுவும் இல்லாத காரணத்தால் அம்பிகா திரையரங்கை இடித்து வணிக வழக்கமாக மாற்ற அந்த திரையராங்கின் உரிமையாளர் முடிவெடுத்துள்ளார்