“பேய் வீடுகள்”
திருவனந்தபுரத்தில் உள்ள International Institute of Migration and Development இயக்குநர் கே.வி. ஜோசப், “மேற்கு நாடுகளில் குடியேறிய கேரளக்காரர்கள் தங்கள் சொத்துக்களை அடிமாட்டு விலையில் விற்கும் நிலை ஏற்படும். கேரளாவின் சமூக-பொருளாதார சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும்” என்கிறார். மத்திய கேரளாவில் ஏற்கனவே பல “பேய் வீடுகள்” (காலியாக உள்ள கைவிடப்பட்ட வீடுகள்) உள்ளன, அவை விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் அவர் கூறுகிறார்.