கடவுள் சிப்
குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக குவாண்டம் சிப் மஜோரானா 1 என்ற புதிய சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிசக்திவாய்ந்த இந்த பிராசசரை கடவுள் சிப் என்றும் கூட அழைக்கிறார்கள். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருளைப் பயன்படுத்தி இந்த சிப்பை உருவாக்கியுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. டோபோலொஜிக்கல் கோர் (topological core) அடிப்படையில் உருவாக்கப்பட்ட உளகின் முதல் குவாண்டம் பிராசஸிங் யூனிட் இதுவாகும். இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா தனது ட்விட்டரில், “நமக்குத் திடப் பொருட்கள், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று வகையான பொருட்கள் மட்டுமே இதுவரை தெரியும். ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது.. புதிய வகைப் பொருட்களான டோபோகண்டக்டர்கள் குவாண்டம் கம்யூடிங் முறைக்குப் பெரியளவில் கைகொடுக்கிறது. இது தற்போதைய மாடல்களை விட வேகமாகவும் அளவில் சிறியதாகவும் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.