TVK உடன் பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசனை
சென்னை, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டில், அவரை பிரசாந்த் கிஷோர் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது. த.வெ.க-வின் சிறப்பு ஆலோசகராக செயல்பட பிரசாந்த் கிஷோர் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். இதில், த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. அதேநேரம் பொதுச்செயலாளர் ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பு சுமார் மூன்று மணி நேரம் நடந்தது. இந்தச் சந்திப்பு முடிந்ததும், த.வெ.க தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில், த.வெ.க-விற்கு தற்போது இருக்கும் வாக்கு சதவீதம், 2026 தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்டவற்றைப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.