அஜித்துக்கு அடுத்த படம்
நடிகர் அஜித்துடன் அடுத்த திரைப்படம் எடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருப்பதாகவும், உறுதியானதும் விரைவில் அறிவிப்போம் எனவும் இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பகுதிநேரமாக சினிமா தொடர்பாக படிக்கும் ‘மீடியா நெக்ஸஸ்’ எனும் புதிய படிப்பை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் இயக்குநர் விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழா மேடையில் பேசிய இயக்குநர் விஷ்ணுவர்தன், பள்ளி படிக்கும் போது தனது தந்தை வாங்கிக்கொடுத்த கேமராதான் தனது வாழ்க்கையே மாற்றி சினிமாவிற்குள் கொண்டு வந்ததாக குறிப்பிட்டார்.