ஆம் ஆத்மியின் தோல்வி
பஞ்சாபில் ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகிகள் 30 பேர் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் நாளை பஞ்சாப் செல்கிறார். அங்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மானுடன் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். பின்னர் மாநில அமைச்சர்கள், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருடன் கலந்து பேசுகிறார். சந்திப்பின் போது டில்லி தேர்தல் தோல்வி பற்றியும், 2027ம் ஆண்டு வரவிருக்கும் பஞ்சாப் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது. மேலும், ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாகவும், அதுபற்றியும் அர்விந்த் கெஜ்ரிவால் விவாதிப்பார் எனறும் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கெஜ்ரிவாலின் அணுகுமுறை மற்றும் பொய்யான வாக்குறுதிகளே தோல்விக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.