காந்தி நோட்டு. கள்ள ஓட்டு – சீமான் உரை
எங்களிடம் நேர்மயை தவிர ஒன்றும் இல்லை. அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களுக்கு தேர்தல் கமிஷன், போலீசார் வேலை பார்த்தனர். பல்வேறு நெருக்கடிகள், கள்ள ஓட்டு, ஓட்டுக்கு காசு. காந்தி நோட்டு, கள்ள ஓட்டு. இதுதான் அவர்கள் பெற்ற வெற்றி.
டெபாசிட்டை இழந்தாலும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், விலைபோகாத வாக்குகள் எங்களுக்கு பதிவாகி உள்ளது. 2026 ல் மிகப்பெரிய மாறுதலை நிகழ்த்துவோம் . அந்த நம்பிக்கையில் பயணிக்கிறோம். கடந்த தேர்தலில் பா.ஜ.,அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் நாம் தமிழர் கட்சிக்கு வந்தது என்பது கேவலமான பார்வை. திராவிட சிந்தனையாளர்கள் தான் அப்படி யோசிப்பார்கள். 15 கட்சிகளுடன் கூட்டணி வைத்து நீங்கள் வாங்கியது தி.மு.க., ஓட்டுகள் என்கிறீர்கள்.