சீமானுக்கு இ.பி.எஸ் கண்டனம்

பெரியார் குறித்து சீமான் தரக்குறைவாக பேசியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் கூறிய பதிலாவது “இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. ஒரு இறந்த பெருந்தலைவரை பற்றி அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு அவர் செய்த நன்மைகள் ஏராளம். அந்த காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட , சிறுபான்மையின் மக்கள் பெரியாரால் மிகவும் பயன் அடைந்தனர். அதை எல்லாம் நாம் மறந்துவிட முடியாது. யாராக இருந்ததாலும் பெரியாரை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.