பலூன் விடும் விழா
வெளிநாட்டை போலவே நம் தமிழகத்திலும் பலூன் விடும் விழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொங்கல் விழாவினையொட்டி சர்வதேச பலூன் விடும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த சூழல், இந்த ஆண்டு சென்னை கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள திருவிடந்தை என்ற பகுதியில் மிக பெரிய ராட்சத பலூன்கள் விட படுகின்றன, இந்த சுற்றுலா ஸ்தலத்திற்கு அமைச்சர்கள், கட்சியினர் , மீடியாக்கள், கலந்துகொண்டன. இந்த விழாவானது இன்று, நாளை, நாளை மறுநாள், 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும். இந்த பலூன் விழாவினை காணவரும் மக்களுக்கு நுழைவு கட்டணம் ரூபாய் 200 வசூலிக்கப்படுகிறது