மழை முன்னறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும். பின்னர், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா கடற்கரையை ஒட்டி வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.