காங்கிரஸ் பி.ஜே.பி தள்ளுமுள்ளு
இந்தியா கூட்டணியினர், மக்களவை தலைவர் ராகுல் காந்தி, ஆகியோர் நீல நிற ஆடையில் அம்பேத்கரின் படத்தை ஏந்தியபடி, அம்பேத்கர் சிலையில் இருந்து நாடாளுமன்ற நுழைவு வாயில் வரை பேரணி சென்றனர். நான்காவது நுழைவாயிலான மகர துவார் அருகே இரண்டு தரப்பினரும் சந்தித்துக் கொண்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளி விட்டதாகவும், அவர் வந்து தன் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும் பிரதாப் சந்திர சாரங்கி குற்றம்சாட்டினார். மேலும் அவைக்குச் சென்ற தன்னை மிரட்டியதாக பாஜகவினர் மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.