“தாதா ஸாஹெப் பால்கே” நினைவஞ்சலி தினம்
இன்று இந்திய திரையுலகின் தந்தை எனப்போற்றப்படும் அமரர்.”தாதா ஸாஹெப் பால்கே”அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினமாகும்.
இந்தியாவின் முதல் சினிமாவான “ராஜா ஹரிச்சந்திரா”வை 1913 இல் தயாரித்து இயக்கிய முதல் இந்திய சினிமாவின் படைப்பாளி திரு.பால்கே அவர்கள்.30.04.1870 அன்று மகராஷ்டிரா மும்பையில் திரியம்பக் என்ற நகரில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.இவர் தயாரித்து இயக்கிய சில முக்கிய படங்கள்:
1913 ராஜா ஹரிச்சந்திரா
1913 மோஹினி பஸ்மாசூர்
1914 சத்யவான் சாவித்ரி
1917 லங்கா தான்
1818 ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம்(birth of shri Krishna)
1919 கலியாமர்தன்
1923 புத்ததேவ்
1926 பக்தப் பிரஹலாத்
1932 சேதுபந்த்தன்
1937 கங்காவதாரன்
போன்றன பால்கேயின் சிறந்த படங்களாகும். இவர் இந்திய திரையுலகிற்கு ஆற்றிய பெருமை மிக்க சேவையை கௌரவிக்குமுகமாக இந்திய அரசு இவரின் பெயரில் திரையுலகில் பல சாதனைகள் புரிந்த கலைஞர்களுக்கு “தாதா ஸாஹெப் பால்கே”விருது வழங்கி சிறப்பாற்றி வருகின்றது. தமிழ் நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு இவ்விருது கிடைத்தமை பெருமைக்குரியது.
செய்தி விக்னேஸ்வரன்