மும்பை ஐகோர்ட் கண்டனம்
மும்பை அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கல்வி நிறுவன அதிபரின் மகனுக்கு ஜாமின் வழங்கியது. மேலும், தங்கள் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப இஷ்டம்போல் அமலாக்கத்துறை செயல்படுவதாக மும்பை ஐகோர்ட் காட்டமாக தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையால் 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகி மனுதாரர் ஒத்துழைப்பு அளித்துள்ளார். கொரோனா காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக எம்.எல்.ஏ.வுக்கு எதிராக தீபக் தேஷ்முக் வழக்கு தொடர்ந்தார்