காட்பாடி அருகே கப்ளிங் உடைந்து கழன்றது இன்ஜின்

காட்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே கப்ளிங் உடைந்து கழன்று, இன்ஜின் இல்லாமல் ஓடிய பெட்டிகளில் பயணிகள் அலறி கூச்சலிட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கொல்கத்தா, விசாகப்பட்டினம், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, கோவை, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8.40 மணியளவில் ராணிப்பேட்டை அருகில் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தை கடந்த போது திடீரென இன்ஜின் தனியாக கழன்று ஓடியது.

இதனால் ரயில் பெட்டிகள் 1 கி.மீ. தூரம் வரை தனியாக ஓடியது. ரயில் கட்டுப்பாடின்றி ஓடுவதை உணர்ந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இன்ஜினை உடனடியாக நிறுத்த முடியாத நிலையில், பின்னால் வரும் ரயில் பெட்டிகள் வந்து மோதும் அபாயம் ஏற்படும் என்பதாலும், டிரைவர் தொடர்ந்து இன்ஜினை இயக்கினார். பயணிகள் பெட்டி தானாக நின்றதும், சிறிது தூரத்தில் இன்ஜினையும் டிரைவர் நிறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.