மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரி
சென்னை மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு, சிறைத்துறை டிஜிபி பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர், கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரையில் மகளிர் சிறப்பு சிறைகள் செயல்பட்டு வருகின்றன. சிறைகளுக்கு பெண் கண்காணிப்பாளர்களையே நியமிக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். சிறை கண்காணிப்பாளராக ஆண் அதிகாரி நியமிக்கப்படுவதால், பெண் கைதிகளால் குறைகளை சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகளிர் சிறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று கேள்வி எழுப்பினர். வேலூர் மகளிர் சிறையில் மட்டுமே ஆண் அதிகாரி உள்ளார், அந்த சிறைக்கும் விரைவில் பெண் அதிகாரி நியமிக்கப்படுவார் என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த நிலையில், தலைமை நீதிபதி கே.ஆர்ஃரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரணையை நவம்பர்.14க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்