அர்ஜூன் கவச வாகனத்தின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு அம்சங்கள்!
நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்த புதிய வகை அர்ஜூன் கவச வாகனத்தின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
சென்னை ஆவடியில் உள்ள டிஆர்டிஓ போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, பின்னர் மேம்படுத்தப்பட்டது அர்ஜூன் கவச வாகனம். உலகில் உள்ள டாங்கிகளில் மிக துல்லியமாக தாக்குல் திறன் கொண்டது அர்ஜூன் எம்கே 1 ஏ. இதில் அப்போதில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் காஞ்சன் கவசத்துடன், டிஆர்டிஓ உருவாக்கிய ரியாக்டிவ் கவசமும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த அர்ஜூன் எம்கே 1 ஏ இரவு மற்றும் பகல் நேரங்களில் இலக்கினை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
10.16 மீட்டர் நீளமும், 68 டன் எடையும் கொண்ட இந்த கவச வாகனம் மணிக்கு 58 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
360 டிகிரி சுழன்று இலக்குகளை தாக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள 120 எம்எம் ரைபிள் மூலம் நொடிக்கு 6 முதல் 8 சுற்றுகள் சுட முடியும். இரவு நேரங்களில் ஓட்டுநர் எதிரே பார்க்கும் வகையில் Night Vision அர்ஜூன் எம்கே 1 ஏ கவச வாகனத்தில் இருக்கிறது. இதில் Commander, Gunner, Loader, Driver என நான்கு பேர் பயணிக்கலாம்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்