பிரதமர் மோடி இன்று சென்னை வருகை!
பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை ஒட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை புறநகர் எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகரப் பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள், நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலை வழியாக செல்லும்.
ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராஹிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக செல்லும்.
அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் செல்லும் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் கச்சேரி சாலை வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளனர்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்