மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில்

லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நாளை நடைபெறும் ஆசியான்-இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புறப்பட்டு சென்றார். ஆசியான்-இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நாளை நடக்கிறது. இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்று இந்த மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக 2 நாள் பயணமாக இன்று அவர் லாவோஸ் புறப்பட்டு சென்றார். ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் இது பிரதமரின் 10வது வருகை என்றும் அத்துடன் இந்த மாநாடுகளுக்கு இடையே உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு செயலாளர் கூறியுள்ளார்.

மேலும், கூட்டாண்மை விரிவாக்கம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பின் திசையை உறுதி செய்வதன் மூலம் இந்தியா-ஆசியான் உறவுகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து இந்த மாநாட்டில் மதிப்பாய்வு செய்யப்படும். நமது பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தலைவர்களிடையே உள்ள கருத்து பரிமாற்றத்துக்கான வாய்ப்பை கிழக்கு ஆசியா உச்சி மாநாடு விழங்கும்

Leave a Reply

Your email address will not be published.