திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார், உயர்நீதிமன்ற
நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக் கோரி திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையின் போது, சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை போலி முகவரி கொண்டு பதிவது அதிகரிப்பு என்றும் அவதூறு கருத்து பதிவை தடுக்க எக்ஸ் தளம் கணக்கு துவங்கும்போது ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஒன்றிய அரசு, எக்ஸ் வலைத்தள பொறுப்பு அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது