அதிமுக ஆட்சியில் குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடு
கடந்த அதிமுக ஆட்சியில் குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் வழிக் கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலை. ஊழியர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.