பருவமழையை எதிர்கொள்ள தயாரான சென்னை
சென்னையில் 25 இடங்களில் மெட்ரோ பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை கொடுத்துள்ளது. பருவமழை தொடங்க உள்ளதால் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது