துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் ரூ.84,000 கோடி மட்டுமே வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சமூக விடுதலை, பொருளாதார விடுதலை வழங்கி வருவது திராவிட மாடல் அரசு. உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.