ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு:
சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு போலீசார் முடிவு
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பெங்களூரு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆதர்ஷ் என்பவர் அளித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.