சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுக்கு
சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றிய சுகாதார ஊழியர்களை நிரந்தரம் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சுகாதார பணியாளர்களாக பணியாற்றிய 7 பேர், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சீனு, பிரபாகரன், வி.ஜெயா, சி.பாப்பா, ஜி.மதியழகன், தேவிகா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நகராட்சி நிர்வாகம் 2019-ல் பிறப்பித்த அரசாணைப்படி, மனுதாரர்களின் பணியை 12 வாரங்களுக்குள் நிரந்தரம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.