விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டாசு தொடர்ந்து வெடித்து கொண்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தகவலின்பேரில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் நீண்ட நேரமாக போராடி வருகின்றனர். வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு அலையில் 40 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் பலர் அலறியடித்து ஓடிய நிலையில் மற்ற தொழிலாளர்கள் நிலையை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் யாரும் அருகில் செல்ல முடியவில்லை.

பட்டாசு அலையில் ஏற்பட்ட தீயை அணைக்க மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்து பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது உராய்வு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் உரிமையாளர் கந்தசாமி தலைமறைவாகி உள்ளார். மேலும் அவரை போலீசார் தேடி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் அதிர்வுகள் 15 கி.மீ., தொலைவுக்கு உணரப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.