திருமாவளவன் பேட்டி
திமுக – விசிக கூட்டணி உறவில் எந்த விரிசலும், உரசலும் இல்லை. விரிசல் ஏற்பட வாய்ப்பும் இல்லை – திருமாவளவன் பேட்டி.
என்னுடைய ஊடக பக்கத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு எனும் சிறிய வீடியோ விவாதத்திற்கு இடமாகிவிட்டது.
திமுக-விசிக உறவில் எந்த சிக்கலும் எழாது. எழுவதற்கு வாய்ப்பும் இல்லை.
ஆதவ் அர்ஜூன் மீது நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கு, உட்கட்சி விவகாரங்களை கலந்து பேசி தான் முடிவெடுக்க முடியும். உயர்நிலை குழுவிலே இடம்பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசியுள்ளேன். மீண்டும் கலந்து பேசி இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் – திருமாவளவன்.