.8,300 கோடியில் சென்னை ஒரகடத்தில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆப்பிள் ஐபோன் மற்றும் கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை, ரூ.8,300 கோடியில் சென்னை ஒரகடத்தில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம். இந்தியாவில் தைவானிய ஒப்பந்த உற்பத்தியாளர் Foxconn நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இது போன்ற முதல் தொழிற்சாலை இதுவாகும். அந்த நிறுவனத்தின் பல தொழிற்சாலை இந்தியாவில் இருந்தாலும், டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசெம்பிளிங் யூனிட்டை அமைப்பது இதுவே முதல்முறை. இதிலிருந்து ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கு டிஸ்ப்ளே மாட்யூல்கலாய் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வரும் காலங்களில் ஃபாக்ஸ்கானின் டிஸ்ப்ளே மாட்யூல் மற்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களான பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்படும். இத்தனை நாட்கள் சீனாவில் அசெம்பிள் செய்யப்பட்ட மாட்யூல்களை இறக்குமதி செய்து இவர்கள் பயன்படுத்தினர் . இதற்கு பதிலாக இனி ஃபாக்ஸ்கானின் டிஸ்ப்ளே மாட்யூல்களை பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்த முடியும்
சீனா + 1 எனப்படும் மாடலின் அடிப்படையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளியே உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் நினைக்கின்றன. அவர்களின் தேர்வாக தமிழ்நாடே இருக்கிறது. இதற்கான தொழிற்சாலை சென்னையில் ஏற்கனவே உள்ள ஃபாக்ஸ்கானின் ஆலை அருகே கட்டப்படும். மிக விரைவில் அங்கே உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பாக்ஸ்கான் அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் அடுத்த அதிரடியாக ஃபாக்ஸ்கான் மின் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாட்டில் ஒரு ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது