50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 விழுக்காடு பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்,”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.