மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,247 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 333 புள்ளி உயர்ந்து 85,247 புள்ளிகளில் நிறைவு பெற்றது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 256 புள்ளிகள் உயர்வுடன் 85,170 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தகம் முடியும் முன் 92 புள்ளிகள் உயர்ந்து 26,032 புள்ளிகளைத் தொட்டது. வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 64 புள்ளிகள் உயர்வுடன் 26,004 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 30 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. பவர்கிரிட் பங்கு 3.9%, ஆக்சிஸ் வங்கிப் பங்கு 2%, என்.டி.பி.சி. பங்கு 1.9%, பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு 1% விலை உயர்ந்தன