தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. ஈரோடு 102, கரூர் பரமத்தி 101, மதுரை நகரம் 105, திருச்சி 103, தஞ்சை 102, தூத்துக்குடி 101, நெல்லை, பரங்கிப்பேட்டையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.