இலங்கை அதிபர் தேர்தல்
இலங்கை புதிய அதிபரான அனுர குமார திசநாயக்கவுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்தது. அன்று மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அநுர குமார திசநாயக இலங்கையின் புதிய அதிபரானார். இதன்மூலம் இலங்கையின் 9-வது அதிபராக இன்று காலை அனுர குமார திசநாயக பதவியேற்றார்.
இந்நிலையில், இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசநாயக்கவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;
வாழ்த்துகள் அனுர குமார திசநாயக்க, இந்தியாவின் அண்டை நாடுகளில் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இலங்கை பிரதமர் அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்;
பிரதமர் மோடி, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி. நமது நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன். ஒன்றாக, நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் பணியாற்றலாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்