குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு காணிக்கையாக கார் வழங்கல்
கேரளாவில் பிரசித்திப்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிப்படுகின்றனர். ஓணம், சித்திரை விஷூ உள்ளிட்ட பல்வேறு பண்டிகை நாட்களில் பக்தர்கள் அலைமோதும்.இந்த நிலையில் நேற்று குருவாயூர் கோயிலில் உச்சிக்கால பூஜை முடித்தப்பின் கார் நிறுவன கேரள டீலர் கேஸ்வின் நிர்வாக இயக்குநர் உதயகுமார் ரெட்டி, தேவஸ்தான சேர்மன் விஜயனிடம் கார் ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.