ஊட்டி மீண்டும் களை கட்டியது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

 நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில்,விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை 2வது சீசன் காலமாகும். இந்த சமயத்தில் ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க வடமாநிலங்களை சேர்ந்த புதுமண தம்பதிகள் வருவார்கள்.

இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது.இதன் காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.குறிப்பாக வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகை அதிகமாக உள்ளது.இதனால் இரண்டாவது சீசன் மெல்ல மெல்ல களை கட்ட துவங்கியுள்ளது.

இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிந்திருந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.