சரவணனை கொலை செய்வதற்கான காரணம்
செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகூரான். இவரது மகன் சனவணன்( 39) இவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த சாலைவிபத்து நடந்துள்ளது. அந்த விபத்தில் சரவணனுக்கு கால்களில் பலத்த அடிப்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார்.
சிகிச்சைக்கு பிறகு கடந்த 10ஆண்டுளாக புலிப்பாக்கத்தில் இருந்து மகாலட்சுமி நகர் வரை தினமும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று எப்போதும் போல சரவணன் நடைபயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில். சனவணன் மகாலட்சுமி நகரில் தலையில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீசார் சரவணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இறப்பு குறித்து நடத்திய விசாரணையில் சரவணனை தலையில் பலமாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சரவணனை கொலை செய்வதற்கான காரணம் என்ன… அவருக்கு யாரிடமாவது முன்விரோதம் இருந்ததா என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த கொலையால் மகாலட்சுமி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.