கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உறுதி!
கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது கடந்த 1 வருடமாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், இலங்கையிடம் இந்தியா தாரைவார்த்தது தான் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கையிலெடுத்த பாஜக கடுமையாக விமர்சித்தது. இருப்பினும் இந்த அரசியல் பிரச்சாரம் இருவழியாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் வந்து நின்றது.