ராகுல் கண்டனம்
வீடுகள் எரிப்பு விவகாரம்; பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது:
பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டியல் இனத்தவர்களின் முழு காலனியையும் எரித்து 80-க்கும் குடும்பங்களின் வீடுகளை அழித்துள்ளனர். பீகாரில் பா.ஜ.க. கூட்டணி அரசில் பட்டியல் இனத்தவர்கள் ஒடுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். வீடுகள் எரிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது, மிகப்பெரிய சதிக்கு ஒப்புதல் அளிப்பதுபோல் உள்ளது என்றும் தெரிவித்தார்.