சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட பெண் மாதவரத்தை சேர்ந்த தீபா என்பது தெரியவந்துள்ளது. குமரன்குடில் பகுதியில் சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் காலை மீட்கப்பட்டது. சூட்கேஸ் வீசப்பட்ட இடத்திற்கு அருகே வசித்து வரும் மணி என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.