கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ
மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொழிற்சாலையில் உறுப்பினர்களாக இருந்து, தங்களது தேயிலை தோட்டங்களில் பறிக்கப்படும் பசுந்தேயிலையை விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்ற தேயிலை உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒரு மணிக்கு தங்களது பணியை முடித்து விட்டு வீடு திரும்பினர். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் லேசான புகை வந்தது.