உத்தராகண்டில் நிலச்சரிவில் சிக்கிய 30
உத்தராகண்டில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள 20 பேரையும் மீட்கும் பணி தீவிரம். உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலாச் சென்ற தமிழர்கள் 30 பேர் நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.