தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 23ம்தேதி நடத்த திட்டமிட்டு, அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ம்தேதி எஸ்பியிடம் மனு அளித்தனர். இதற்கு சில நாட்களுக்கு முன் போலீசார் அனுமதி அளித்தனர். அதோடு 33 நிபந்தனைகளை பின்பற்றவும் காவல்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.
23ம்தேதி மாநாடு நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் 10 நாட்களே உள்ளதால் திட்டமிட்டப்படி ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதிய அவகாசம் இல்லாததால் மாநாட்டை தள்ளிப்போடுவது குறித்து நீலாங்கரை வீட்டில் நடிகர் விஜய், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் அக்டோபர் 16ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாநாடு ஒத்திவைப்பை அதிகாரப்பூர்வமாக கட்சி சார்பில் அறிவிக்கப்படவில்லை