தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு…! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களின் அநேக இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 9 சென்டிமீட்டர் மழையும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
bookmarked!!, I really like your blog!
Check out my web-site: safedog.cn