மணிப்பூரில் ஊரடங்கு பிறப்பிப்பு.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு தளர்வு ரத்து.