அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தின் நீர்
3 மாவட்ட குளம், குட்டையை நிரப்பும் அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தின் நீர் கசிவால் குளக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோட்டில் உள்ள 1045 நீர்நிலைகளை நிரப்ப அவிநாசி-அத்திக்கடவு திட்டம் ரூ.1916 கோடியில் நிறைவேற்றப்பட்டது. ஃபுட்வால்வின் குழாயில் ஏற்பட்ட கசிவால் நீர் வீணாக குளத்தின் கரையில் விழுந்து குளக்கரை கரைந்து வருகிறது. நீர் செல்வதை கட்டுப்படுத்தும் ஒ.எம்.எஸ். கருவி, குளத்தில் விழும் அபாயம் உள்ளதால் சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.